நம் குரல்

Monday, February 15, 2010

பயணிகள் கவனிக்கவும்













கண்களிலும் இதயத்திலும் ஆவலைத் தேக்கி
அந்தப் புராதன கட்டடத்தினுள் நுழைகிறீர்கள்
சுவர்களில் பதிந்திருக்கும்
தொன்மை ஓவியங்களின் சிற்பங்களின்
கலைநேர்த்தி வியந்து
வரலாற்றுப் பக்கங்களில் நுழைந்து
கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறீர்கள்

பயணக்கட்டுரைக்குப் பயன்படுத்த ஆனமட்டும்
சில குறிப்புகளைச் சேகரிக்கிறீர்கள்

நினைவில் நிலைக்க
குழுவாய் நின்று உங்கள் வருகையைக்
கேமராவில் பதிவு செய்கிறீர்கள்
திரும்புகிறீர்கள்

வாசலில் கைவினைப் பொருள்களோடும்
சுற்றுலா வழிகாட்டி நூலோடும்
உங்களை நோக்கி ஏக்கமாய்க் காத்திருக்கும்
ஏழைச் சிறார்களின் பார்வையைச்
சாதூரியமாய்த் தவிர்த்து வெளியேறுகிறீர்கள்

ஆக்கம்: ந.பச்சைபாலன்
மலேசியா
நன்றி: அநங்கம் டிசம்பர் இதழ்

No comments:

Post a Comment